இந்தியா

ரன்பீர் கபூர் படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து: ஒருவர் பலி

மும்பையில் நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 

DIN

மும்பையில் நடிகர் ரன்பீர் கபூர் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 

நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பெயரிடப்படாத ஹிந்தி திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள சித்திரகூட் படப்பிடிப்பு தளத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இரவு 10.30 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தீ விபத்தினால் படப்பிடிப்பு தளம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. இந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரன்பீர், ஷ்ரத்தா இருவரும் ஸ்பெயினில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில தினங்களுக்கு முன்னர்தான் மும்பை வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

SCROLL FOR NEXT