கோப்புப் படம் 
இந்தியா

உ.பி.: தோழியின் வீட்டு முன் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை

உ.பி.யில் தோழியின் வீட்டு முன் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

உ.பி.யில் தோழியின் வீட்டு முன் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம், பாபத்மவு கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் தீபக்(21). இவர், கந்தேரியா கிராமத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் அங்கு வெளியே போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்தார். ஆனால் இவரது வருகைக்கு தோழியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது தனக்கு தாகமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். உடனே ஒரு குழந்தை அவருக்கு தண்ணீர் கொண்டு வந்திருக்கிறது, ஆனால் அவர் அதை குடிக்கவில்லை. மாறாக, அருகில் இருந்த குழாய்க்கு சென்று தீபக் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் தங்க நகைகளை அளவிடும் பணி தொடக்கம்

வார பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT