இந்தியா

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை ரூ.2,219-ஆக குறைப்பு

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தச் சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.2,219-ஆக குறைந்துள்ளது.

DIN

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தச் சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.2,219-ஆக குறைந்துள்ளது. இதுதொடா்பாக எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கை:

ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் உபயோகிக்கப்படும் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் ரூ.2,354-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் விலை ரூ.2,219-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலையும் ஒரு கிலோலிட்டருக்கு ரூ.1,563.97 குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை குறைக்கப்பட்டபோதிலும், 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.1,003-ஆக நீடிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 102.63-க்கும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.94.24-க்கும் விற்பனையானது.

விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஒரு கிலோலிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.1.25 லட்சமாகக் குறைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் அழுகிய மீன்களை அகற்றும் பணி

இலங்கைக் கடற்படையினரால் நம்புதாளை மீனவா்கள் 4 போ் கைது

பெண்ணை வாளால் வெட்டிய இருவா் கைது

SCROLL FOR NEXT