இந்தியா

பாடகர் கே.கே. மறைவு: முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி

DIN

பாடகர் கே.கே.வின் திடீர் இறப்புக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி தெரிவித்துள்ளனர். 

“அருமையான பாடகர் கே.கே.வின் திடீர் மரணம் கவலையளிக்கிறது. அவர் இறந்தாலும் அவரது இசையின் மூலமாக வாழ்வார். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் லெஜண்டரி ஸ்பின்னர் அனில் கும்ப்ளே, “கே.கே.வின் மறைவு மிகுந்த கவலையளிக்கிறது. அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என கூறினார். 

சேவாக்  கூறியதாவது: பாடகர் கே.கே. கொல்கத்தாவில் பாடிக்கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து இறந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வாழ்க்கை எவ்வளவு எளிதில் உடையக்கூடும் என்பதற்கு மற்றுமொரு நினைவூட்டம். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி. 

யுவராஜ் சிங் கூறியதாவது: வாழ்க்கை நிச்சயமற்றது, எளிதில் உடையக்கூடியது. கே.கேவின் மரணம் கவலையளிக்கிறது. அவரது இழப்பைத் தாங்கும்  சக்தியை கடவுள் அவர்களது குடும்பத்திற்கு அளிக்கட்டும். 

வாசிம் ஜாபர் கூறியதாவது:  “ ஹம் ரகே யா நா ரகே கல் கல் யாட் ஆயேங்கே கே யா பல்” கே.கே.வின் மறைவு மிகுந்த துக்கத்தைத் தருகிறது. அவரது குடும்பம் மற்றும் நணபர்களுக்கு வேண்டிக்கொள்கிறேன்.  

கே.கே. பாடிய பாடல்  - ஹம் ரகே யா நா ரகே கல் கல் யாட் ஆயேங்கே கே யா பல்

இந்த பாடலின் அர்த்தம்: நாம் நாளைக்கு இருக்கிறோமோ இல்லையோ நாம் நாளைக்கு இந்த நாட்களை நினைப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT