இந்தியா

பாடகர் கே.கே. மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்குப்பதிவு

பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து மரணம் இயற்கைக்கு மாறானது என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

DIN

பிரபல பின்னணிப் பாடகா் கே.கே. என்கிற கிருஷ்ணகுமாா் குன்னத்து மரணம் இயற்கைக்கு மாறானது என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெற்கு கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமாா் ஒரு மணி நேரம் பாடல்களைப் பாடினாா்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு அவா் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பியபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்நிலையில், கொல்கத்தா புது மார்கெட் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கே.கே.வின் குடும்பத்தினர் இன்று காலை கொல்கத்தா வந்துள்ள நிலையில், அவர்களிடன் அவரது உடலை காண்பித்த பிறகு, பிரேத பரிசோதனை செய்யவுள்ளனர். தொடர்ந்து, பிற்பகலில் அவரது உடலை குடும்பத்தினரிடம் காவல்துறையினர் ஒப்படைக்கவுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், மராத்தி, வங்காளி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT