இந்தியா

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்: பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

DIN

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கராச்சியின் மத்திய மாவட்டத்தில் உள்ள பூரனி சப்ஜி மண்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் மீது பொதுமக்கள் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

பாகிஸ்தானில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, இந்த போராட்டம் வெடித்து வருகிறது. 

ஆத்திரமடைந்த பாகிஸ்தானியர்கள் சப்ஜி மண்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் மீது கற்களை வீசி சேதப்படுத்தினர். எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக போராட்டக்காரர்கள் மத்தியில் ஏற்கனவே கோபம் இருந்தது. இந்நிலையில், பெட்ரோல் வழங்குவதை நிறுத்திய பின்னர் இது மேலும் அதிகரித்துள்ளது. நாகன் சௌரங்கியிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து லர்கானாவில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லர்கானாவில் உள்ள ஜின்னா பாக் சௌக்கில் கோபமடைந்த குடிமக்கள் டயர்களுக்கு தீ வைத்ததால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT