இன்று வெளியாகவிருந்த 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு ஒத்திவைப்பு 
இந்தியா

இன்று வெளியாகவிருந்த 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவு ஒத்திவைப்பு

ஆந்திர மாநிலத்தில் இன்று வெளியாகவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

IANS


அமராவதி: ஆந்திர மாநிலத்தில் இன்று வெளியாகவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக, ஆந்திர மாநில பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவிப்பினை வெளியிட்டது.

தேர்வு முடிவுகளைக் காண மாணவ, மாணவிகள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சுமார் ஆறு லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதியுள்ளனர். மேலும், திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று முற்பகல் 11 மணிக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தேர்வு முடிவுகள் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT