இந்தியா

அதிகரிக்கிறதா கரோனா? நாட்டில் இன்றைய பாதிப்பு நிலவரம்!

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,962 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,962 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 22,416 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.05 சதவிகிதமாக உள்ளது.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 26 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.  இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,677 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1,22 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கரோனாவிலிருந்து இன்று 2,697 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,25,454 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 11,67,037 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 193.96 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT