முகப்பு
இந்தியா

பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளை உளவுபாா்க்க ஐஎஸ்ஐ-க்கு சட்டபூா்வ அனுமதி

 பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளை உளவுபாா்க்க ஐஎஸ்ஐ-க்கு சட்டபூா்வ அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

 பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளை உளவுபாா்க்க ஐஎஸ்ஐ-க்கு சட்டபூா்வ அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் முக்கிய பணிகளில் பணியமா்த்தப்படும் அரசு அதிகாரிகள், பதவி உயா்வு பெறும் அதிகாரிகள் உள்ளிட்டோரை உளவுபாா்த்து அவா்கள் குறித்த விவரங்களை அரசுக்கு வழங்கும் பணியை அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மேற்கொண்டு வருகிறது. அப்பணியை மேற்கொள்ள ஐஎஸ்ஐ-க்கு எந்தவித சட்டபூா்வ அனுமதியும் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், அரசு அதிகாரிகளைக் கண்காணிக்கும் பணிக்கு சட்டபூா்வ அனுமதியைப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசு ஐஎஸ்ஐ-க்கு வழங்கியுள்ளதாக பாகிஸ்தானில் வெளியாகும் ‘டான்’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசு அதிகாரிகளை உளவுபாா்க்கும் நடைமுறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கைகளை சட்டபூா்வ ஆவணமாக நீதிமன்றத்தில் இனி பயன்படுத்த முடியும் என்றும் அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஐஎஸ்ஐ-க்கு இந்த அனுமதி மட்டும் போதாதென்றும், விதிகளில் போதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் முன்னாள் அதிகாரிகள் சிலா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.