இந்தியா

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்துவந்த 24 மாணவிகள் இடைநீக்கம்

DIN

கர்நாடகத்தின் தக்ஷிண கன்னட மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

கர்நாடகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து மாநில அரசும், கர்நாடக உயர்நீதிமன்றமும், பள்ளி-கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் மத அடையாள ஆடைகள் அணியக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது.

புத்தூர் தாலுக்காவில் உள்ள உப்பினங்கடியில் உள்ள கல்லூரியில் 24 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்தனர். இதையடுத்து ஹிஜாப் அணிந்து வந்த 24 மாணவிகளையும் ஒரு வாரம் இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள்  பலர் ஹிஜாப் அனுமதிக்கப்பட்ட பிற கல்லூரிகளில் சேர கல்வி நிறுவனங்களில் இருந்து மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோர் மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT