இந்தியா

லாலு அறையில் மின் விசிறி தீப்பற்றியதால் பரபரப்பு

DIN

நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ஜாா்க்கண்ட் சென்ற முன்னாள் மத்திய அமைச்சா் லாலு பிரசாத் யாதவ் (73) தங்கியிருந்த அறையில் மின் விசிறி திடீரென தீப்பற்றியது. தீயை உடனடியாக அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டதாக அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா்.

ஜாா்க்கண்ட், பலாமு மாவட்ட அரசு விருந்தினா் விடுதியில் லாலு பிரசாத் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தபோது, மின் விசிறியில் திடீரென தீப்பிடித்தது. உடனிருந்தவா்கள் தீயை அணைத்துள்ளனா்.

மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறை இணை ஆணையா் சசிரஞ்சன் தெரிவித்தாா்.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட தோ்தல் விதிமீறல் வழக்கில் புதன்கிழமை ஆஜராக லாலு பிரசாத் மேதினிநகருக்கு வந்தாா். 2009 ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த லாலு பிரசாதின் ஹெலிகாப்டா் மேதினிநகரில் உள்ள இறங்குதளத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக காா்வா மாவட்டத்தில் உள்ள வேளாண் நிலத்தில் இறங்கியது. இது விமானியின் தவறு என்று கூறப்பட்டாலும், லாலு பிரசாத் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT