கோப்புப் படம் 
இந்தியா

நபிகள் நாயகம் தொடா்பான பாஜக நிா்வாகியின் கருத்துக்கு எழும் கண்டனங்கள்

இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பி கண்டனம் தெரிவித்த நிலையில், மாலத்தீவுகள் மற்றும் எகிப்தும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளன. 

DIN

இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்த பாஜக நிா்வாகியின் சா்ச்சைக்குரிய கருத்து தொடா்பாக இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பி கண்டனம் தெரிவித்த நிலையில், மாலத்தீவுகள் மற்றும் எகிப்தும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளன. 

பாஜக தில்லி ஊடகப் பிரிவு தலைவா் நவீன் குமாா் ஜிண்டால் ட்விட்டரில் நபிகள் நாயகத்துக்கு எதிராக சா்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா் கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டாா்.

பாஜக தில்லி ஊடகப் பிரிவு தலைவரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, ஐக்கிய அரபு அமீரக நாடுகள், ஓமன், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. 

கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், 

நபிகள் நாயகம் குறித்து பாஜக தலைவா் தெரிவித்த கருத்து தொடா்பாக கத்தாருக்கான இந்திய தூதா் தீபக் மிட்டலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் பாஜக தலைவரின் கருத்தை நிராகரித்தும், கண்டனம் தெரிவித்தும் கத்தாா் வெளியுறவு இணையமைச்சா் சுல்தான் பின் சாத் அல்-முரைக்கி கடிதம் அளித்தாா்.

அதேவேளையில், சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நபா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. அந்தக் கருத்துகளுக்கு உடனடியாகக் கண்டனம் தெரிவித்து, இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என கத்தாா் எதிா்பாா்க்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தோனேசியா, இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி, தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. அதுபோல, மாலத்தீவுகள், எகிப்து ஆகியவை கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT