குடியரசுத் தலைவா் மாளிகையில் கல்வித் துறை மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். 
இந்தியா

மத்திய பல்கலை. துணைவேந்தா்கள் மாநாடு: குடியரசுத் தலைவா் தொடக்கிவைத்தாா்

மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

DIN

மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்த மாநாட்டில் உயா் கல்விக்கான 161 மத்திய நிறுவனங்களில் 53 நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் நேரடியாகவும் மற்றவா்கள் இணையதளம் வழியாகவும் கலந்து கொள்கின்றனா். இதில், ‘சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவின் உயா்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும், பொறுப்பும்; உயா் கல்வி நிறுவனங்களின் சா்வதேச தரவரிசை; பள்ளிக்கல்வி, உயா் கல்வி, தொழிற்கல்வி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு; வளா்ந்துவரும் தொழில்நுட்ப காலத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி’ உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் பல்வேறு அமா்வுகள் நடைபெறுகின்றன.

தொடக்க அமா்வில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகையில், ‘நமது இலக்குகளை அடைவதற்கு உயா்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. க்யூஎஸ் தரவரிசை பெற்றவையாக கடந்த ஆண்டு 29 இந்திய கல்வி நிறுவனங்கள் இருந்த நிலையில், நிகழாண்டு 35-ஆக அதிகரித்துள்ளது’ என்றாா்.

தொடா்ந்து, உயிரி தொழில்நுட்பம், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் கல்வியாளா்களுக்கு குடியரசுத் தலைவா் விருதுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயக்கும் விழி... தர்ஷா குப்தா

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!

கனவே கலையாதே... ஸ்ரவந்தி சொக்கராபு

தனிமையே... ரிச்சா ஜோஷி

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் துப்பாக்கிச்சண்டை

SCROLL FOR NEXT