இந்தியா

சித்து மூஸேவாலா கொலை வழக்கு: 8 பேர் கைது

பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

DIN


பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை பஞ்சாப் காவல்துறை கைது செய்துள்ளதாக மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

உயிரிழந்த சித்துவின் தந்தை சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கோரியிருந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணைக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து, இன்று மூஸேவாலா கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை இன்று கைது செய்து சிறப்புப் புலனாய்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்கள் ஹரியாணாவை சேர்ந்த கேக்டா என்ற சந்தீப் சிங், பதிண்டாவைச் சேர்ந்த தல்வாண்டி, சபோவைச் சேர்ந்த மன்னா என்ற மன்பிரீத் சிங், ஃபரித்கோட்டில் உள்ள தைபாயைச் சேர்ந்த மன்பிரீத் பாவ், அமிர்தசரஸில் உள்ள டோட் கல்சியா கிராமத்தைச் சேர்ந்த சராஜ் மின்டு, தகாத்-மல்லியைச் சேர்ந்த பிரப்தீப் சித்து அல்லது பப்பி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹரியாணா மாநிலம் சோனிபட்டில் உள்ள ரெவ்லி கிராமத்தைச் சேர்ந்த மோனு தாகர், ஹரியாணாவின் ஃபதேஹாபாத்தில் வசிப்பவர்கள் பவன் பிஷ்னோய் மற்றும் நசீப் என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT