சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவு
சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இன்று பிற்பகல் 2:52 மணியளவில் பிஷான் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
36.09 டிகரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.78 கிழக்கு தீர்க்கரேகையில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரின் லுஷனில் 6.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.