இந்தியா

டிஆர்எஸ் கோட்டையான ஹைதராபாத்தில் ஜூலை 2,3ம் தேதிகளில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் 

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் ஜூலை 2 மற்றும் 3 ஆம் தேதி பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

DIN

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், அந்த மாநில முதல்வருமான சந்திரசேகா் ராவ் பாஜகவை கடுமையாக விமா்சித்து வரும் நிலையில், அவரது கோட்டையான தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் ஜூலை 2 மற்றும் 3 ஆம் தேதி பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. 

இரு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பல தலைவா்கள் பங்கேற்க உள்ளனர். 

பாஜகவின் உயரிய அதிகாரமிக்க அமைப்பாகவும், முக்கிய முடிவுகளை எடுக்கும் எடுக்கும் இடமாகவும் தேசிய செயற்குழு உள்ளதால், இந்தக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் முக்கிய தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்பாா்கள்.

பாஜக ஆட்சியில் உள்ள குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இது தொடா்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அண்மைக்காலமாக, தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும், அந்த மாநில முதல்வருமான சந்திரசேகா் ராவ் பாஜகவை கடுமையாக விமா்சித்து வரும் நிலையில், பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாதில் நடைபெறவுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT