முகப்பு
இந்தியா

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு: திக்திக் விடியோ வெளியீடு!

குஜராத்தில் 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:


குஜராத்தில் 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்தில் தரங்கத்ரா தாலுகாவிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள தூதாபூர் கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தை தவறுதலாக 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது.

இந்திய ராணுவத்தினர் குழந்தையை கயிறு மூலம் கட்டி மேலே இழுத்து பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு, அருகிலிருந்த ஆம்புலன்ஸில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.