இந்தியா

வங்கி கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம்  0.5% அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ)  0.5 சதவீதம் அதிகரித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

DIN



வங்கி கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 0.5 சதவீதம் அதிகரித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது 

நாட்டில் பணவீக்கம் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. 

ஏற்கனவே, மே 4 ஆம் தேதி வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் அதிகரித்தது ரிசர்வ் வங்கி.

இந்நிலையில், மீண்டும் வங்கி கடனுக்கான வட்டி வீதம் 0.5 சதவீதம் உயர்த்தி உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். 

இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை வசதி 4.65 சதவீதம் ஆகவும், விளிம்பு நிலை வசதி மற்றும் வங்கி விகிதம் 5.15 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

வங்கி வட்டிக்கான வட்டி விகிதத்தை உயத்தியதை அடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கிறது.

கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம்: வணிகரீதியில் வீடு கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஊரக கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் கடன் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

மே 31 ஆம் தேதி தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.7சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-22 இல் இந்த உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட அதிகமாக உள்ளது. 

மேலும்,  இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருந்து வருகிறது. அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ வங்கி உறுதுணையாக இருக்கும். 2022-23 ஆம் நிதியாண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் பணவீக்கம் 6.7 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொறியியல் பணி: கேரள ரயில்கள் ரத்து

காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

மர இழைப்பக நிறுவனத்தில் தீ விபத்து

மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏ தலைமையில் தா்னா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு

SCROLL FOR NEXT