இந்தியா

மகாராஷ்டிரத்தை 2 நாள்களில் நெருங்கும் பருவமழை

DIN

புது தில்லி: நாட்டில் பருவமழையானது படிப்படியாகத் தொடங்குவதாகவும், மகாராஷ்டிரத்தில் இன்றும் இரண்டு நாள்களில் பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அருணாசலப் பிரதேசத்தில் வரும் 10 - 11ஆம் தேதிகளில் மிக அதிகனமழை (204.5 மிமீக்கும் மேல்)பெய்யும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல அசாம், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே 29ஆம் தேதி கேரளத்தை பருவமழை தொட்டுவிட்டது. மே 31ஆம் தேதி முதல் ஜூன் 7 வரையிலான காலக்கட்டத்தில் தென் மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி, கேரளம், கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், தமிழகத்திலும் பருவமழை பரவத் தொடங்கியது.

பருவமழை தொடங்குவதில் எந்த தாமதமும் இல்லை. படிப்படியாக பருவமழை தொடங்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT