சித்து மூஸேவாலா 
இந்தியா

சித்து மூஸேவாலா கொலை வழக்கு: இருவரிடம் தீவிர விசாரணை

பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN


பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இதையடுத்து, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மூஸேவாலா கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹரியாணாவை சேர்ந்த கேக்டா என்ற சந்தீப் சிங், பதிண்டாவைச் சேர்ந்த தல்வாண்டி, சபோவைச் சேர்ந்த மன்னா என்ற மன்பிரீத் சிங், ஃபரித்கோட்டில் உள்ள தைபாயைச் சேர்ந்த மன்பிரீத் பாவ், அமிர்தசரஸில் உள்ள டோட் கல்சியா கிராமத்தைச் சேர்ந்த சராஜ் மின்டு, தகாத்-மல்லியைச் சேர்ந்த பிரப்தீப் சித்து அல்லது பப்பி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சித்து மூஸேவாலாவை கொலை செய்ய ஆயுதங்களை வழங்கியதாக  பதிண்டாவைச் சேர்ந்த கேசவ் மற்றும் சேத்தன் ஆகிய இருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT