இந்தியா

மலை உச்சியில் ஒரு சமரச பேச்சுவார்த்தை: காவலருக்கு குவியும் பாராட்டு

ENS


இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கியில், அடிமாலி காவல்நிலையத்துக்கு உள்பட்ட மலைப் பகுதியின் உச்சியில், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய இளம்பெண்ணுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை உயிருடன் மீட்ட காவலருக்கு பாராட்டு குவிகிறது.

குத்திராலம் குடி அருகே உள்ள மலைப் பகுதியின் உச்சியில், பழங்குடியின பெண் ஒருவர், காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் நின்றிருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது.

அவரது உறவினர்கள் நெருங்கினாலே குதித்துவிடுவதாக மிரட்டிக் கொண்டிருந்த பெண்ணை நெருங்கிய காவலர் சந்தோஷ், பெண்ணிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார். முதலில் அவர் சொல்வதைக் காதில் வாங்காமலிருந்த அப்பெண், பிறகு அவரது பேச்சுக்கு பதில் கொடுக்கத் தொடங்கினார். அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட காவலர், பிரச்னைக்கு தான் தீர்வு தேடித் தருவதாகவும், தனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், பிரச்னையை நான் சுமூகமாக முடித்துத் தருகிறேன் என்று தற்கொலை எண்ணத்தைக் கைவிடும் வகையில் ஒரு மணி நேரம் பேசினார்.

இதைக் கேட்ட அப்பெண், மனம் மாறி, கீழேஇறங்கி வந்தார். இதுபோன்று மீண்டும் தற்கொலை எண்ணம் வரக் கூடாது என்றும், தன்னை நிராகரித்தவர்களுக்கு முன்னே வாழ்ந்து காட்ட வேண்டும் என்றும் உறுதி பெற்றுக் கொண்டு, மனநல நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வழிகாட்டுவதாகவும் உறுதி அளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT