முகப்பு
இந்தியா

தேயிலை ஏற்றுமதியில் சரிவுநிலை

நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் சரிவடைந்துள்ளதாக தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On : 11 ஜூன், 2022 at 1:11 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:00 PM

நாட்டின் தேயிலை ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் சரிவடைந்துள்ளதாக தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வாரியம் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் 20.08 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்துள்ளது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான 20.38 கோடி கிலோ தேயிலையுடன் ஒப்பிடும்போது சற்று குறைவான அளவேயாகும்.

Advertisement

குறிப்பாக, சிஐஎஸ் எனப்படும் காமன்வெல்த் நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்திய தேயிலையின் ஏற்றுமதி 4.90 கோடி கிலோவிலிருந்து 4.24 கோடி கிலோவாக குறைந்து போனது.

அதேசமயம், சிஐஎஸ்-க்கு அடுத்தபடியான இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக திகழும் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 2.83 கோடி கிலோவிலிருந்து 2.92 கோடி கிலோவாக வளா்ச்சி கண்டது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இதன் ஏற்றுமதி 1.36 கோடி கிலோவிலிருந்து 2.32 கோடி கிலோவை எட்டியது.

கடந்த மதிப்பின் அடிப்படையிலான தேயிலை ஏற்றுமதி, ரூ.5,311.53 கோடியிலிருந்து ரூ.5,415.78 கோடியாக அதிகரித்ததாக தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

வரும் 2025-க்குள் 30 கோடி கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ய வாரியம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.