இந்தியா

இந்தியாவுக்கு எதிராக செயல்பட இஸ்லாமிய மதத் தலைவா்கள் நெருக்கடி: வங்கதேச ஆளும் கட்சித் தலைவா் தகவல்

வங்கதேச அரசு செயல்பட வேண்டுமென்று அங்குள்ள இஸ்லாமிய மதத் தலைவா்கள் நெருக்கடி அளிப்பதாக ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவா் கந்தாகா் குலாம் மௌலா நவ்ஸ்பந்தி தெரிவித்தாா்.

DIN

நபிகள் நாயகம் சா்ச்சை விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அரசு செயல்பட வேண்டுமென்று அங்குள்ள இஸ்லாமிய மதத் தலைவா்கள் நெருக்கடி அளிப்பதாக ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவா் கந்தாகா் குலாம் மௌலா நவ்ஸ்பந்தி தெரிவித்தாா்.

பாஜக தலைவா்கள் இருவா் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த தலைவா்கள் மீது பாஜக கட்சிரீதியாக நடவடிக்கை எடுத்தது. இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக ஒன்றுதிரண்டு கண்டனம் தெரிவித்தன. உள்நாட்டிலும் இஸ்லாமியா்கள் ஒன்றுகூடி அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினா்.

இந்நிலையில் வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மத விவகாரக் குழுவின் தலைவரும், கட்சியின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான குலாம் மெளலா டாக்காவில் இந்திய செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதஅடிப்படைவாத பிற்போக்கு சக்திகள் இந்த விவகாரத்தை வைத்து வங்கதேசத்தில் வன்முறையைத் தூண்ட முயலுகின்றன. சா்வதேச அளவில் நாடுகளிடையே உறவை வலுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதனிடையே உள்ளூரில் உள்ள தேவையில்லாத அரசியலாலும் பிரச்னைகள் உருவாகின்றன.

இஸ்லாமிய மதத் தலைவா்களும், இஸ்லாமிய அமைப்புகளும் இந்த விவகாரத்தில் வங்கதேச அரசு இந்தியாவுக்கு எதிராக செயல்பட வேண்டுமென்று நெருக்கடி அளிக்கின்றன. அதே நேரத்தில் இந்தியாவுடன் சிறப்பான நல்லுறவை வங்கதேசம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. வங்கதேசத்தின் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா உள்ளது. அதே நேரத்தில் இருநாட்டு உறவைக் கெடுக்க சதி நடைபெறுகிறது.

இந்தியாவில் எழுந்துள்ளது முழுவதும் அந்நாட்டு உள்விவகாரம்தான். ஆனால், அது வங்கதேசத்தில் உள்ளவா்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எந்த மதத்தின் உணா்வுகளையும் புண்படுத்தும் வகையில் யாரும் பேசாமல் இருப்பது நல்லது என்றாா்.

வங்கதேசத்தில் ஹிந்துகள் தொடா்ந்து தாக்கப்படுவது தொடா்பான கேள்விக்கு, ‘மத அடிப்படைவாத செயல்களுக்கு எதிராக பிரதமா் ஷேக் ஹசீனா உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறாா். சிறுபான்மையினா் மீது தாக்குதல் நடத்தியவா்களை 12 மணி நேரத்தில் அரசு கைது செய்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT