முகப்பு
இந்தியா

தில்லி மருத்துவமனையில் தீ விபத்து: ஒருவர் பலி

தில்லி ரோகினி பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், நோயாளி ஒருவர் உயிரிழந்தார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
பகிர்:

தில்லி ரோகினி பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், நோயாளி ஒருவர் உயிரிழந்தார்.

தில்லி ரோகினி பகுதியில் உள்ள பிரம்ம சக்தி மருத்துவமனையில் இந்த தீ விபத்து நிகழ்ந்து. இதன் மூன்றாவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்து குறித்து மருத்துவ நிர்வாகம் தகவல் தெரிவித்ததையடுத்து, 

சம்பவ இடத்துக்கு 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை அவசரமாக மருத்துவ நிர்வாகம் அப்புறப்படுத்தினர். 

இதனால், ஆக்ஸிஜன் உதவி செயலிழந்ததால் 64 வயதான நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இவர் ஒருவரைத் தவிர அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்பு சேவை (DFS) இயக்குனர் அதுல் கர்க் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →