முகப்பு
இந்தியா

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
கோப்புப்படம்
பகிர்:

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 

இந்த நிலநடுக்கமானது நள்ளிரவு 12.37 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவாகியது. 

நிலநடுக்கத்தின் வடக்கு அட்சரேகை 33.48 டிகிரியாகவும், கிழக்கு தீர்க்கரேகை 75.59 ஆகவும், பஹல்காம் பகுதியில் 5 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. 

கடந்த அக்டோபர் 8, 2005 அன்று, ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →