இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு!

DIN


குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, அனைத்து முற்போக்கு எதிர்க்கட்சிகளும் ஜூன் 15, 2022 அன்று பிற்பகல் 3 மணிக்கு புதுதில்லியில் ஒன்றுகூடி அடுத்தகட்ட செயல்கள் குறித்து விவாதிக்க திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக வலிமையான எதிர்க்கட்சியாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைப்பதற்கான முன்னெடுப்பாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்."

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT