இந்தியா

ராகுல் காந்தியிடம் 2 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் தில்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

DIN

ராகுல் காந்தியிடம் 2 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் தில்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோனியாவும் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

கரோனா தொற்றிலிருந்து குணமடையாததால் விசாரணைக்கு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கு அமலாக்கத் துறைக்கு கோரிக்கை விடுத்ததன் பேரில், வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு வெள்ளிக்கிழமை சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணையை அனுப்பியது.

இந்நிலையில், இதே வழக்கில் சோனியாவின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜாரானார்.

அவரிடம் ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை விலைக்கு வாங்கியதில் பண மோசடி தொடர்பாக துணை இயக்குநர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி முன்னிலையில், உதவி இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகள் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

விசாரணைக்கு முன்பு, சொல்வதெல்லாம் எண்ணை என்று உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ராகுல் காந்தி.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்தார் ராகுல் காந்தி. அவருடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

வாக்குத் திருட்டு: வீட்டு எண் பூஜ்யம், ஒரே முகவரியில் 45 பேர்.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய ராகுல்!

பொதுத்துறை நிறுவனத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் பொறியாளர் வேலை!

வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT