முகப்பு
இந்தியா

2 நாள் பயணமாக கர்நாடகம் வந்தார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக கர்நாடகத்துக்கு இன்று வருகை புரிந்துள்ளார். 

Updated On : 13 ஜூன், 2022 at 3:24 PM
பகிர்:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக கர்நாடகத்துக்கு இன்று வருகை புரிந்துள்ளார். 

குடியரசுத் தலைவர் தனது மனைவி சவிதாவுடன் ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறங்கினார், அங்கு அவரை ஆளுநர் தாவர் சந்த் கெலாட் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் வரவேற்றனர்.

ராஷ்ட்ரிய ராணுவப் பள்ளியின் பிளாட்டினம் விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராஜ்பவனில் தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

செவ்வாய்க்கிழமை, பெங்களூரில் உள்ள தொட்டகல்லாசந்திரா அருகே கனகபுரா சாலை, வைகுண்ட மலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரதியான இஸ்கான் கோயிலின் பிரதிஷ்டை விழாவில் அவர் கலந்து கொள்கிறார். 

குடியரசுத் தலைவர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் புது தில்லி செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.