சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம்: மத்திய அரசு
இணைய சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இணைய சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என அச்சு, மின்னனு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இணைய சூதாட்டம் தொடர்புடைய விளம்பரங்கள் அச்சு, மின்னனு, சமூக மற்றும் இணையவழி ஊடகங்களில் அதிகம் தென்படுவதால், பொதுநலன் கருதி அறிவுறுத்தப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அச்சு மற்றும் மின்னனு ஊடகங்களில் இணைய சூதாட்டம் தொடர்புடைய விளம்பரங்களை ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிக்க | ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை
மேலும் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் பதிப்பாளர்கள் உள்பட இணையவழி மற்றும் சமூக ஊடகங்களுக்கும், இந்தியாவில் அல்லது இந்தியர்களைக் குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களைக் காட்சிப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால், நுகர்வோருக்கு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க நிதி மற்றும் சமூகப் பொருளாதார அபாயம் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.