முகப்பு
இந்தியா

கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே: நீதிமன்றம்

கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே,  மனிதனுக்கு அல்ல என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:32 AM
பகிர்:


மதுரை: கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே,  மனிதனுக்கு அல்ல என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி அடுத்த வடவன்பட்டியில் அமைந்துள்ள சண்டிவீரன் கோயிலில், சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற கிளை நீதிபதி நிர்மல்குமார் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

வடவன்பட்டி சண்டிவீரன் கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என்று சேதுபதி என்பவர் தொடர்ந்த வழக்கில், சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே; மனிதனுக்கு அல்ல என்றும், கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →