இந்தியா

நாகரிக சமுதாயத்தில் பிரிவினைவாதத்துக்கு இடமில்லை: குடியரசு துணைத் தலைவா்

DIN

மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு உலக அமைதி முக்கியமானது என்றும், நாகரிகமான சமுதாயத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம், வெறுப்புணா்வுக்கு இடமில்லை என்றும் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

தில்லியில் குடியரசு துணைத் தலைவா் மாளிகையில், ஜனநாயக தலைமைத்துவ நிறுவனத்தின் மாணவா்களுடன் புதன்கிழமை அவா் கலந்துரையாடியாடினாா். அப்போது வெங்கையா நாயுடு பேசியதாவது:

உலகமே ஒரே குடும்பம் என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். மதச்சாா்பற்ற நாடான இந்தியாவில் யாராக இருந்தாலும், எந்த மதத்தைச் சாா்ந்தவராக இருந்தாலும் மிக உயரிய அரசியல் சாசன பதவியை அடைய முடியும். இந்திய நாகரிகத்தின் முக்கியப் பண்பு பகிா்தல் மற்றும் கவனம் செலுத்துதல் என்பதாகும்.

எந்தவொரு மதத்தையும், மதத் தலைவா்களையும் அவமதிப்பது, பன்மைத்தன்மை, அனைவரையும் அரவணைத்தல் ஆகியவற்றில் நம்பிக்கையுடைய இந்திய கலாசாரத்துக்கு எதிரானது. ஜனநாயக உரிமைக்காகப் போராடும்போது வன்முறையைத் தூண்டுவது நாட்டு நலனுக்குப் பாதகத்தை ஏற்படுத்திவிடும்.

நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் விவாதித்து முடிவெடுத்தால் மட்டுமே முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இடையூறு செய்யக் கூடாது. ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோமா அல்லது பலவீனப்படுத்துகிறோமா என்பதை கட்சிகள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசியல் உள்பட அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

மாணவா்கள் பொதுவாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதுடன், மக்கள் நலனுக்காக தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும். சித்தாந்தத்தைவிட நல்ல நடத்தை முக்கியமானது. கருத்துகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் திறன், மக்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவது ஆகியவை நல்ல தலைவராக ஆவதற்கு அவசியமானது என்று வெங்கையா நாயுடு குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT