இந்தியா

 குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல் நாளில் 11 பேர் மனு தாக்கல்

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் 11 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். வரும் 29-ஆம் தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம்.
 தமிழ்நாடு, தில்லி, மகாராஷ்டிரம், பிகார், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 11 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததாகவும், வாக்காளர் அடையாள அட்டையை இணைக்காத காரணத்தால் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவித்தன. பிகாரில் இருந்து போட்டியிடுவோரின் பெயர் லாலு பிரசாத் யாதவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 வேட்புமனுவை குறைந்தது 50 எம்.பி. அல்லது எம்எல்ஏக்கள் முன்மொழிந்தும், 50 எம்.பி. அல்லது எம்எல்ஏக்கள் வழிமொழிந்தும் இருக்க வேண்டும். டெபாசிட்டாக ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT