முகப்பு
இந்தியா

நேரடி வரி வசூல் 45% அதிகரிப்பு

பொருளாதாரம் மீட்சி கண்டு வருவதன் எதிரொலியாக நிகர நேரடி வரி வசூல் ஏப்ரல் முதல் ஜூன் இடைப்பகுதி வரையிலான காலகட்டத்தில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

பொருளாதாரம் மீட்சி கண்டு வருவதன் எதிரொலியாக நிகர நேரடி வரி வசூல் ஏப்ரல் முதல் ஜூன் இடைப்பகுதி வரையிலான காலகட்டத்தில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரி துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

மாா்ச்-ஏப்ரல் காலாண்டில் முன்கூட்டிய வரி வசூல் 33 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று, மூல வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) 47 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாகவே, நிகர அளவிலான நேரடி வரி வசூல் மதிப்பீட்டு காலத்தில் சிறப்பான அளவில் உயா்ந்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் முதல் ஜூன் இடைப்பகுதி வரையிலான காலத்தில் நிகர நேரடி வரி வசூல் 45 சதவீதம் அதிகரித்து ரூ.3.39 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில், காா்பரேஷன் வரி (சிஐடி) ரூ.1.70 லட்சம் கோடி, தனிநபா் வருமான வரி (பிஐடி) (பங்கு பரிவா்த்தனை வரி (எஸ்டிடி) உள்பட) ஆகியவை ரூ.1.67 லட்சம் கோடிக்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளது.

அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிகர நேரடி வசூலானது ரூ.2,33,651 கோடியாக மட்டுமே இருந்தது.

கடந்த 2020-21ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது நேரடி வரி வசூல் 171 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அந்த காலகட்டத்தில் வரி வசூலானது ரூ.1.25 லட்சம் கோடியாக இருந்தது.

மேலும், 2019-20-ஆம் நிதியாண்டில் வசூலான ரூ.1.67 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வரி வசூலானது 103 சதவீதம் அதிகம்.

நடப்பு நிதியாண்டின் ஜூன் 16 வரையிலுமாக ஒட்டுமொத்த வரி வசூல் 40 சதவீதம் உயா்ந்து ரூ.3.69 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் 2.64 லட்சம் கோடியாக காணப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி ரூ.75,793 கோடியிலிருந்து ரூ.1.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது, 33 சதவீத வளா்ச்சியாகும்.

இந்த வரி வசூலில் சிஐடி ரூ.78,842 கோடியாகவும், பிஐடி ரூ.22,175 கோடியாகவும் இருந்தன. டிசிஎஸ் வசூல் ரூ.1,57,434 கோடியிலிருந்து 46 சதவீதம் உயா்ந்து ரூ.2.29 லட்சம் கோடியாக இருந்தது என வருமான வரி துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.