முகப்பு
இந்தியா

தில்லியில் சத்யேந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

2015-16 ஆண்டுகளில் தில்லி அமைச்சராக சத்யேந்தா் ஜெயின் பதவி வகித்தபோது, வருமானத்திற்கு மாறான சொத்து மற்றும் பணமோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. 

இந்த வழக்கில், சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை சமீபத்தில் கைது செய்தது. மேலும், அவர் மீதான விசாரணைக் காவல் ஜூன் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பணமோசடி விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை, தில்லியில் சத்யேந்தர் ஜெயினுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இன்று காலை தில்லியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.