ரயில்வே பணியில் தந்தை - மகன்: இருவரது ரயிலும் ஓரிடத்தில் கடந்தபோது.. 
இந்தியா

ரயில்வே பணியில் தந்தை - மகன்: இருவரது ரயிலும் ஓரிடத்தில் கடந்தபோது.. 

புகைப்படங்களுக்கு மவுசு குறைந்துபோனது. எப்போது வேண்டுமானாலும் ஒரு நாளைக்கு எத்தனை புகைப்படங்களை வேண்டுமென்றாலும் கிளிக் செய்து தள்ளலாம்.

DIN


எப்போது செல்லிடப்பேசியில் கேமரா வசதி வந்ததோ, அப்போதே புகைப்படங்களுக்கு மவுசு குறைந்துபோனது. எப்போது வேண்டுமானாலும் ஒரு நாளைக்கு எத்தனை புகைப்படங்களை வேண்டுமென்றாலும் கிளிக் செய்து தள்ளலாம்.

ஆனால் குழந்தையின் புன்னகை, தாலி கட்டும் தருணம் போல சிலருக்கு சில புகைப்படங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடுவது உண்டு. அந்த வகையில், தனது தந்தையுடன் மகன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் அவர்களுக்கு வாழ்வில் மிகவும் பொன்னான தருணமாக அமைந்துள்ளது.

சுரேஷ் குமார் என்பவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு செல்ஃபி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகியுள்ளது.

ரயில்வே பயண டிக்கெட் பரிசோதகரான மகன் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். அவரது தந்தை ரயில்வே ஊழியர். இருவரும் இன்று ரயிலில் பணியில் இருந்த போது, எதிர்பாராத வகையில், இருவரது ரயிலும் ஒரே இடத்தில் ஒன்றை ஒன்று கடந்து சென்றது. அப்போது தந்தையுடன் மிக அழகிய ஒரு செல்ஃபியை எடுத்துள்ளார் சுரேஷ் குமார்.

ரயிலின் பாதுகாவலராக தந்தை - பயண டிக்கெட் பரிசோதகராக மகன்.. இருவரது ரயில்களும் ஒன்றை ஒன்று கடந்து சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பதிவிட்டுள்ளார்.

இதனை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்து, தங்களது சுட்டுரைப் பக்கங்களில் பகிர்ந்து வருவதால் வைரலாகியுள்ளது.  பலரும் தங்களது கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT