இந்தியா

நாட்டில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 12,847 பேருக்குத் தொற்று

நாட்டில் புதிதாக 12,847 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN

நாட்டில் புதிதாக 12,847 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 

நாட்டில் 24 மணி நேரத்தில் புதிதாக 12,847 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  நாடு முழுவதும் 63,063 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தொற்று பாதித்தவர்களில் மேலும் 14 பேர் இறந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,24,817 ஆக அதிகரித்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.

கரோனாவில் இருந்து மேலும் 7,985 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,26,82,697-ஆக அதிகரித்துள்ளது குணமடைந்தோர் விகிதம் 98.64 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,95,84,03,471 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மட்டும் 15,27,365 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் பாதிப்பு 8,822 ஆக இருந்த நிலையில் நேற்று 12,213 ஆக அதிகரித்தது. இன்றும் ஒருநாள் பாதிப்பு 12,000 -யைத் தாண்டி பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT