கோப்புப்படம் 
இந்தியா

கர்நாடகம்: வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் மீட்பு

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு அருகே உள்ள ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சிக்கித் தவிர்த்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

DIN

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு அருகே உள்ள ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சிக்கித் தவிர்த்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

பெலவடகி ஊராட்சிக்கு உட்பட்ட அமரகோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் வியாழக்கிழமை மாலை சுமார் 150 மாணவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இரவில் நீர் மட்டம் தணிந்த பின்னர் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் உள்ள மாணவர்கள் டிராக்டரைப் பயன்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

பிற்பகலில் பெய்த கனமழைக்கு அருகில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எதிர்பாராத வெள்ளத்தால் பள்ளியில் நீர் சூழ்ந்த நிலையில் தீவை போன்று காட்சியளித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!

வாக்காளரை துன்புறுத்தாதீர்; ஆதாரை ஏற்றுக்கொள்க: உச்ச நீதிமன்றத்தில் மமதா வாதம்

முக்கியத்துவம் பெறா நேரத்துக்கு மாற்றப்படும் ஆடுகளம் தொடர்!

மமதா அரசு மத்திய திட்டங்களைத் தடுக்கிறது: பாஜக எம்பி குற்றச்சாட்டு!

சொத்து பிரச்னை: ஹோட்டல் அறையில் உறவினர் கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்!

SCROLL FOR NEXT