குடியரசுத் தலைவா், பிரதமருக்கு1,000 கிலோ மாம்பழம்: வங்கதேசத்தில் இருந்து பரிசு
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா 1,000 கிலோ மாம்பழங்களைப் பரிசாக அனுப்பி வைத்துள்ளாா்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா 1,000 கிலோ மாம்பழங்களைப் பரிசாக அனுப்பி வைத்துள்ளாா்.
‘அம்ராபலி’ எனப்படும் மிகவும் புகழ்பெற்ற மாம்பழம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இப்போது மாம்பழ விளைச்சல் உச்சத்தில் உள்ள நிலையில், சுவை மிகுந்த மாம்பழங்கள் இந்தியத் தலைவா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகம் மூலம் இந்த மாம்பழங்கள் வந்துள்ளன. தில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
இந்திய-வங்கதேச நல்லுறவைப் பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் இதுபோன்ற மாம்பழங்களை ஷேக் ஹசீனா பரிசாக வழங்கி வருகிறாா். கடந்த ஆண்டு வங்கதேசத்தையொட்டி இந்திய எல்லை மாநிலங்களான மேற்கு வங்கம், அஸ்ஸாம், திரிபுரா முதல்வா்களுக்கும் அவா் மாம்பழங்களை அனுப்பி வைத்தாா்.