கோப்புப்படம் 
இந்தியா

அக்னிபத் விவகாரம்: ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமருக்கு நண்பர்களின் குரல்களை தவிர, வேறு எதுவும் கேட்பதில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

DIN

பிரதமருக்கு நண்பர்களின் குரல்களை தவிர, வேறு எதுவும் கேட்பதில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் பணியமா்த்தப்படுவா் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த வயது உச்சவரம்பு 23-ஆக அதிகரிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இதனிடையே அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் 3ஆவது நாளாக இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பிரதமருக்கு நண்பர்களின் குரல்களை தவிர, வேறு எதுவும் கேட்பதில்லை என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், அக்னிபத் - இளைஞர்கள் நிராகரிப்பு, வேளாண் சட்டம் - விவசாயிகள் நிராகரிப்பு, பணமதிப்பிழப்பு - பொருளாதார அறிஞர்கள் நிராகரிப்பு, ஜிஎஸ்டி - வர்த்தகர்கள் நிராகரிப்பு. நாட்டு மக்களின் தேவையை பிரதமரால் புரிந்துகொள்ள முடியவில்லை. 

ஏனென்றால் பிரதமருக்கு நண்பர்களின் குரல்களை தவிர, வேறு எதுவும் கேட்பதில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

புதிய சொற்களைக் கண்டறிவோம்

புதியதொரு அத்தியாயம்!

SCROLL FOR NEXT