இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த காவல் அதிகாரி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் வீட்டின் அருக நெல் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த காவல் அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

DIN

ஜம்மு-காஷ்மீரில் வீட்டின் அருக நெல் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த காவல் அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவல் உதவி ஆய்வாளர் ஃபரூக் அகமது மிர். நேற்று இவர் தனது வீட்டின் அருகே உள்ள நெல் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் உதவி ஆய்வாளரை நோக்கி சுட்டனர். 

இதில் ஃபரூக் அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் ஃபரூக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

காவல் உதவி ஆய்வாளர் உடல் நெல் வயல்வெளியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT