நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன்பாக 4-வது நாளாக இன்று(திங்கள்கிழமை) ஆஜராகியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ஏற்கெனவே ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாள்கள் ஆஜராகினார்.
இதையடுத்து அடுத்தகட்ட விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறையினா் அறிவுறுத்தினா். ஆனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லியில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியிருப்பதால், தனக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி வேண்டுகோள் விடுதத்தன் அடிப்படையில் அவர் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகக் கூறினர்.
ஏற்கெனவே 3 நாள்களில் 30 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் இன்று 4-வது நாளாக ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.