முகப்பு
இந்தியா

5-ஆவது நாளாக ராகுலிடம் விசாரணை

நேஷனல் ஹெரால்டு பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
பகிர்:

நேஷனல் ஹெரால்டு பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தியது.
 செவ்வாய்க்கிழமை பகல் 11.15 மணிக்கு அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு வந்த ராகுலிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. கடந்த நான்கு நாள் நடைபெற்ற விசாரணையின்போது மதிய உணவு இடைவேளைக்கு அவர் வீட்டிற்கு சென்று வந்தார். ஆனால், செவ்வாய்க்கிழமையன்று மதிய இடைவேளையின்றி அவர் இரவு 8 மணிக்கு வெளியே சென்றார். அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் திரும்பிய அவரிடம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை விசாரணை நடைபெற்றது. கடந்த நான்கு நாள்களில் ராகுலிடம் மொத்தம் 42 மணி நேரம் விசாரணையை அமலாக்கத்துறை நடத்தியுள்ளது.
 அப்போது ராகுலிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு விடியோ பதிவும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →