இந்தியா

உலகம் முழுவதும் யோகா பரவியதில் மகிழ்ச்சி: ம.பி. முதல்வர்

DIN

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் பள்ளி மாணவர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் சர்வதேச யோகா தினத்தை இன்று கொண்டாடினார். 

சௌஹான் போபாலில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மாணவர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து யோகா பயிற்சிகளைச் செய்தார். 

தனது இல்லத்தில் உரையாற்றிய சௌஹான், 

யோகாவின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். சர்வதேச யோகா தினம் இப்போது உலகம் முழுவதும் 177 நாடுகளில் கொண்டாடப்படுகிறது என்றார்.

பண்டைய இந்திய யோகா இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்வில் மக்களின் முன்னுரிமை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 

முன்னதாக, லால் பரேட் மைதானத்தில் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடத் திட்டமிடப்பட்டது. திங்கள் மாலை பெய்த மழை காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

முன்பு, இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க யோகா பயிற்சி செய்தனர், ஆனால் இப்போது முழு உலகமும் அதைச் செய்து வருகிறது என்று சௌஹான் கூறினார், 

மேலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்துடனும், கூர்மையான அறிவுடன் இருக்க  தினமும் யோகா செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தனது நாடாளுமன்றத் தொகுதியான மொரீனாவில் உள்ள படேஷ்வரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

மேலும், மாநிலம் முழுவதும் கோட்ட, மாவட்டம், தாலுகா, தொகுதி மற்றும் கிராம அளவில் பல்வேறு யோகா நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT