இந்தியா

காணொலி பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

DIN

காணொலி வாயிலாக நடக்கவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டை சீனா வரும் 23, 24 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடத்தவுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ""சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்து கொள்ளவுள்ளார். ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள உயர்நிலைக் கூட்டத்தில் சர்வதேச சூழல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
 பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்றுச்சூழல், அறிவியல்-தொழில்நுட்பம், புத்தாக்கம், வேளாண்மை, தொழிலகக் கல்வி-பயிற்சி உள்ளிட்டவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது.
 கரோனா தொற்று பரவலை எதிர்கொள்ளுதல், பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, சர்வதேச பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து: அவசரகால கதவை உடைத்து மீட்கப்பட்ட பயணிகள்!

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆபத்தானது:மோடி!

பறக்கும் உயிர்! ஹன்சிகா..

சென்னைக்கு மழை எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

சூர்யா - 44 இசையமைப்பாளர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT