முகப்பு
இந்தியா

ஜூன் 27-ல் யஷ்வந்த் சின்ஹ வேட்புமனுத் தாக்கல்

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹ ஜூன் 27ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
யஷ்வந்த் சின்ஹ
பகிர்:

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹ ஜூன் 27ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், திரிணமூல் கட்சி மூத்த தலைவராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹவை இன்று எதிர்க்கட்சிகள் ஒருமனதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹ ஜூன் 27ஆம் தேதி காலை 11.30 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்” என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு - காஷ்மீர்  தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →