முகப்பு
இந்தியா

குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேலுக்கு கரோனா

குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல், தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல்
பகிர்:


அகமதாபாத்: குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல், தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், சாதாரண அறிகுறிகளை உணர்ந்ததை அடுத்து தனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், தனக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. 

இதையடுத்து "நான் தற்போது முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 

என்னுடன் தொடர்பில் இருந்து அனைத்து நண்பர்களையும் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று  படேல் கூறினார்.

குஜராத்தில் சில வாரங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றன.

சுகாதாரத் துறை அறிவிப்பின்படி, மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 226 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,524 ஆக உயர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →