இந்தியா

அசாம்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ராகுல் வேண்டுகோள்

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

DIN

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் 32 மாவட்டங்களில் மேலும் 12 பேர் உயிரிழந்தனர். இதுவரை 55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்ட டிவிட்டரில், 

அசாமில் உள்ள மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளத்தை எதிர்கொள்கின்றனர். வெள்ளத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவும், அசாமில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதித்த வெள்ளம் குறித்து கவலை தெரிவித்ததோடு, அங்குள்ள மக்களின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்தார். 

இந்த கடினமான நேரத்தில், அசாமில் நிவாரணப் பணிகளில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும் இந்தியத் தேசிய காங்கிரஸின் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் இந்தியில் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்

தேசிய விருதுகள் பெற்ற Parking படக்குழுவின் கொண்டாட்டம்!

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

அவதூறு வழக்கு: ஜார்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்!

SCROLL FOR NEXT