இந்தியா

இளைஞர்களின் கனவை பாஜக உடைத்துவிட்டது: ராகுல் காந்தி

DIN

அக்னிபத் திட்டத்தை செயல்படுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை ஆளும் பாஜக உடைத்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், அக்னிபத் திட்டத்தினால் ராணுவத்தில் சேரமுடியாத சோகத்தில் இளைஞர் ஒருவர் கண்ணீர் விட்டு தனது வேதனையை வெளிப்படுத்தும் விடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

விடியோவினை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது: “கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்தில் எந்த ஒரு ஆள் சேர்ப்பும் இல்லை.  2018-19ஆம்  ஆண்டில் 53,431 பேரும், 2019-20ஆம் ஆண்டில் 80,572 பேரும் ராணுவத்தில் சேர்ந்துள்ளனர். ஆனால், 2020-21 மற்றும் 2021-2022 ஆண்டுகளில் ஒருவர் கூட ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை. புதிதாக 4 ஆண்டு ஒப்பந்த ஆள் சேர்ப்பினைக் கொண்டு வந்து நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவினை ஆளும் பாஜக உடைத்துவிட்டது. அவர்களது கண்ணீர் புயலாக மாறி பிரதமரின் இந்த பிடிவாதப் போக்கினை அழிக்கும்.” என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT