இந்தியா

42 எம்.எல்.ஏ.க்களுடன் விடியோ வெளியிட்ட ஏக்நாத் ஷிண்டே

அசாம் மாநிலத்தில் தன் ஆதரவாளர்களான 42 எம்எல்ஏக்களுடன் முகாமிட்டிருக்கும் ஏக்நாத் ஷிண்டே புதிய காணொலியை வெளியிட்டுள்ளார்.

DIN

அசாம் மாநிலத்தில் தன் ஆதரவாளர்களான 42 எம்எல்ஏக்களுடன் முகாமிட்டிருக்கும் ஏக்நாத் ஷிண்டே புதிய காணொலியை வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே மற்றும் 21 எம்எல்ஏக்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராகத் திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

முதலில் அமைச்சருடன் 10 எம்எல்ஏக்கள் 'காணாமல் போனதாக'க் கூறப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசும்போது,  ‘40 எம்எல்ஏக்கள் இங்கு இருக்கிறார்கள். நாங்கள் பாலசாஹேப் தாக்கரேவின் இந்துத்துவாவின்படி நடக்கிறோம்' என்றும் தெரிவித்திருந்தார்.

குஜராத்திலிருந்து கிளம்பிய ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் தற்போது அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள ரேடிசன் புளூ விடுதியில் தங்கியுள்ளனர். 

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 35 பேர் சிவசேனைக் கட்சியினர், 7 பேர் சுயட்சை எம்எல்ஏக்கள் ஒன்றாக இருக்கும் காணொலி தற்போது வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT