அசாமில் மேலும் சில எம்எல்ஏ-க்கள்: என்ன செய்யப்போகிறது சிவசேனை?
ஏக்நாத் ஷிண்டே அணியில் ஏற்கெனவே 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் உள்ள நிலையில், மேலும் சில சிவசேனை எம்எல்ஏ-க்கள் இன்று (வியாழக்கிழமை) மாலை அசாம் சென்றடைந்துள்ளனர்.
ஏக்நாத் ஷிண்டே அணியில் ஏற்கெனவே 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் உள்ள நிலையில், மேலும் சில சிவசேனை எம்எல்ஏ-க்கள் இன்று (வியாழக்கிழமை) மாலை அசாம் சென்றடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை மூத்த தலைவரும் அதிருப்தி எம்எல்ஏ-வுமான ஏக்நாத் ஷிண்டே, ஆதரவு எம்எல்ஏ-க்களை கொண்டு கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளார்.
இதையும் படிக்க | தூது சென்றவர் அணி மாறினார்: சிவசேனைக்கு அடுத்த பின்னடைவு!
கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என ஷிண்டே தரப்பு கூற, நேரில் வந்து ஆலோசனை நடத்தினால் கூட்டணியிலிருந்து விலகத் தயார் என உத்தவ் தரப்பு கூறி வருகிறது. இதனால், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே அணியில் 42 மகாராஷ்டிர எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதுவே உத்தவ் தாக்கரேவிடம் வெறும் 13 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர்.
இந்தப் பிரச்னை இன்னும் தீராத நிலையில், மேலும் சில சிவசேனை எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைய அசாம் சென்றடைந்துள்ளனர். குவஹாட்டியில் ஷிண்டே மற்றும் மற்ற எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அதே விடுதியைதான் இந்த எம்எல்ஏ-க்களும் சென்றடைந்துள்ளனர்.
சமீபத்தில் அசாம் சென்றடைந்துள்ள எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை குறித்த உறுதியான தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.